எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

ஜுன் 15, 2022 - 11:17
ஜுன் 16, 2022 - 10:37
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்றைய தினம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இணையத்தளம் மற்றும் செயலி என்பனவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்தார்.

எனவே, ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

எரிபொருள் அடங்கிய கப்பல்

இதேநேரம் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளையதினம் நாட்டை வந்தடைய உள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும் அந்தக் கப்பல் மூலம் கொண்டு வரப்படும் எரிபொருள், மின்சாரம் பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!