முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி
பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முறையான பதிவின்றி வாகனங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 03 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
"எந்த கிராமத்திலும் மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாமல் வீதியில் செலுத்த மாட்டார்கள். ஆனால் ஒரு காலத்தில் இந்த நாட்டின் அமைச்சர்கள் வாகனங்களை இறக்குமதி செய்தார்கள், அவ்வாறு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அந்த வாகனங்களை உரிமம் இல்லாமல், போலி எண் தகடுகளுடன் பயன்படுத்துகிறார்கள். சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்றார்.