'விரைவில் பஸ் கட்டணங்களை குறைக்க முடியும்'
இந்தியாவில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதித்தால், பஸ் கட்டணத்தை கணிசமாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதித்தால், பஸ் கட்டணத்தை கணிசமாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களுக்கு டொலரில் பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டுகிறார்.
இந்திய ரூபாயைக் கையாள்வதற்காக அரசாங்கம் செயற்படுவதால், அதே சந்தர்ப்பத்தை தனியார் பஸ்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டதாகவும், ஆனால் இதுவரை மத்திய வங்கியிடமிருந்து இறுதிப் பதில் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
அனுமதித்தால், பஸ் உதிரிபாகங்களை மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம் எனவும், எனவே பயணிகளுக்கும் நிவாரணம் வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.