பாராளுமன்றத்துக்கு கட்டில், மெத்தை எதற்காக? சபையில் கேள்வி

பாராளுமன்றில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில், மெத்தை மற்றும் கதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியது.

டிசம்பர் 9, 2022 - 16:24
பாராளுமன்றத்துக்கு கட்டில், மெத்தை எதற்காக? சபையில் கேள்வி

பாராளுமன்றில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில், மெத்தை மற்றும் கதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியது.

குறித்த பொருட்கள் தனியார் நிறுவனம் ஒன்றினால் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் புத்திக பத்திரண பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பான ஆவணங்களை சபையில் சமர்ப்பித்த அவர்,  இருவர் தூங்கக்கூடிய கட்டில் - மெத்தை மற்றும் கதிரைகள் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

தனியார் நிறுவனத்தினால் இந்த பொருட்கள் எதற்காக வழங்கப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!