கெலேகால ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் திருட்டு

ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டுஆலயத்தில் இருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது.

டிசம்பர் 19, 2022 - 14:45
டிசம்பர் 19, 2022 - 14:48
கெலேகால ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் திருட்டு

நுவரெலியா-  நானுஓயா வீதிக்கு அருகிலுள்ள கெலேகால ஸ்ரீ கதிரேசன்  ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டுஆலயத்தில் இருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ( 16 )  இரவு  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!