இராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக சார்லஸுக்கு கடிதம்
டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ஓஷல ஹேரத்தும் இதில் கலந்துகொண்டார்.

இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே இலங்கையிலும் பிரித்தானியாவிலும் சட்டத்துக்கு முரணாக செயற்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள சமூக ஆர்வலர்கள் குழுவொன்று, பிரித்தானிய மன்னர் சார்லஸுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
‘எஸ்.எல். தேசய’ யூடியூப் சேனலை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஆர்வலர் தர்ஷன ஹந்துங்கொட மற்றும் சிலர் இந்தக் கடிதத்தை, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு நேற்று (28) சென்று கையளித்துள்ளனர்.
டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ஓஷல ஹேரத்தும் இதில் கலந்துகொண்டார்.
“பிரித்தானிய பிரஜையான டயானா கமகே, சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, போலி அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு, இலங்கை பிரஜை போல் நடித்து, அரச பதவிகளை வகித்துள்ளார்.
“தேர்தலில் போட்டியிட்டுள்ளமையனது இலங்கையின் சட்டத்துக்கும் எதிரானது. பிரித்தானிய சட்டத்தின்படி, சார்லஸ் மன்னன் அவரை விசாரிக்க வேண்டும்” என்று அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக சமூக ஆர்வலர் தர்ஷன ஹந்துங்கொட தெரிவித்தார்.
விசா காலாவதியான திருமதி டயானா கமகே, தற்போது சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருப்பதாக அவர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.