வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் மோதி விபத்து
மட்டக்களப்பு - ஊரனி பகுதியில் எரிபொருள் நிலைய வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு - ஊரனி பகுதியில் எரிபொருள் நிலைய வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இன்று அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.