பாட்டலியின் புதிய அரசியல் கட்சி மே மாதம் அறிமுகம்

அதன்படி, நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற ஐக்கிய குடியரசு முன்னணி என்ற கட்சி மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார.

ஏப்ரல் 2, 2023 - 15:45
பாட்டலியின் புதிய அரசியல் கட்சி மே மாதம் அறிமுகம்

அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற ஐக்கிய குடியரசு முன்னணி என்ற கட்சி மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார.

“நமக்கு தகுதி அடிப்படையிலான அரசியல் அமைப்பு தேவை, குடும்ப பரம்பரை அடிப்படையிலான அரசியல் அமைப்புகளுக்கு முடிவு கட்ட வேண்டும். பொதுமக்களின் வாக்குகளை இலஞ்சம் கொடுத்து வெல்லும் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

இப்போது பின்பற்றும் காலாவதியான சோசலிச-முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு மாறாக, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு நமக்கு ஒரு புதிய அரசியல் நடைமுறைவாதம் தேவை. இந்த புதிய அரசியல் சித்தாந்தத்தை மே மாதம் வெளியிட உள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!