பணிபுரியும் பெண்களுக்கு அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

பெண்களை வேலை செய்யும் பணியிடங்களில் அசௌகரியம் ஏற்படாமல் பாதுகாக்க, எல்லா இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜுன் 16, 2023 - 19:14
பணிபுரியும் பெண்களுக்கு அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

பெண்களை போதிய வசதிகளுடன் இரவு நேர கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் இன்று (16) இ்டம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “தற்போது இரவு நேரங்களில் பணி புரிவதற்கு அனுமதிக்க வேண்டும் என பெண்கள் கேட்கிறார்கள். அவர்களது உரிமைக்கான பாதுகாப்பு வழங்க வேண்டும், தேவையான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெண்களை வேலை செய்யும் பணியிடங்களில் அசௌகரியம் ஏற்படாமல் பாதுகாக்க, எல்லா இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பராமாிப்பு உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாகவே அறிவார்ந்த பெண்கள் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனை கருத்திற்கொண்டு பெண்கள் பணிக்கு செல்லும் போது, ​​குழந்தைகளைப் பராமரிக்கும் திட்டம் உருவாக்கப்படவுள்ளது” என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!