நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரித்தமை தொடர்பில் பகுப்பாய்வு!
1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1.76 சதவீத வாக்குகளும், 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 1.97 சதவீத வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த 21ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக உள்ளன.
அதாவது, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். இது மொத்த வாக்குகளில் 2.2 சதவீதமாகும்.
1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1.76 சதவீத வாக்குகளும், 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 1.97 சதவீத வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 2.31 சதவீத வாக்குகளும், 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மொத்தம் 135,452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இது 0.85 சதவீதமாக இருந்தது. எனினும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் பதிவான நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை விட இது குறைவாகும்.
எனவே, நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை தொடர்பில் பகுப்பாய்வு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை பகுப்பாய்வு மூலம் கண்டறிய எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.