தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு தயங்கும் இந்திய ஜாம்பவான்கள் இதுதான் காரணமா?

தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது. 

ஜுன் 23, 2023 - 14:25
தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு தயங்கும் இந்திய ஜாம்பவான்கள் இதுதான் காரணமா?

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக செயல்பட்ட சேத்தன் சர்மா ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியதால், தானாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து தேர்வுக் குழு தலைவர் பதவி நிரப்பப்படாமலேயே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட ஏராளமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதனால் இந்திய அணியை தேர்வு செய்வது யார் என்றும், அடுத்த தேர்வுக் குழு தலைவரை பிசிசிஐ எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி காரணமாக தேர்வுக் குழு தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐ நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வுக் குழு தலைவரை நியமிக்கும் வகையில் வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்திய அணியை தேர்வு செய்யும் முக்கிய பொறுப்பில் சேவாக்?

இதனால் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு இந்திய ஜாம்பவான் வீரர்கள் வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் 2008ல் இந்திய ஜாம்பவான் திலீப் வெங்சர்கார், 2011ல் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தேர்வுக் குழு தலைவராக செயல்பட்டனர்.

அதன்பின்னர் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிசிசிஐ ஆண்டுக்கு ரூ.1 கோடி வரையில் ஊதியமாக வழங்குகிறது. அதேபோல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் ரூ.90 லட்சம் வரை ஊதியமாக பெறுகிறார்கள்.

தோனி கற்று தந்த பாடம்.. இதை செய்தாலே போதும்... நடைமுறை படுத்துவாரா ரோகித்!

ஐபிஎல் வர்ணனை, விளம்பரங்கள், அகாடமி உள்ளிட்டவை மூலம் ஈட்டும் வருமானத்தை விடவும் தேர்வுக் குழு தலைவருக்கு கிடைக்கும் வருமானம் குறைவு என்பதால் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னணி வீரர்களாக இருந்தவர்கள் தயங்குவதாக பார்க்கப்படுகிறது. 

பயிற்சியாளர்கள் பதவிக்கு ஓடி வந்து விண்ணப்பிக்கும் ஜாம்பவான் வீரர்கள், தேர்வுக் குழு தலைவர் பதவிக்கும் விண்ணப்பிக்க முன்வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!