தோனி கற்று தந்த பாடம்.. இதை செய்தாலே போதும்... நடைமுறை படுத்துவாரா ரோகித்!
2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. இதுதான் இந்தியா வெல்லப்போகும் கடைசி ஐசிசி கோப்பை. இதன்பிறகு நாம் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று அப்போது யாராவது சொல்லி இருந்தால் ரசிகர்கள் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் இந்திய அணி அந்த அளவுக்கு பலமாக விளங்கியது. எனினும் அதன் பிறகு தொடர்ந்து சரிவை சந்தித்தது. விராட் கோலி தலைமையில் 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி வரை இந்தியா சென்றாலும் பைனலில் தோல்வியை தழுவியது.
தற்போது ரோகித் சர்மாவும் அதே பாணியை தான் கடைப்பிடித்து வருகிறார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு தோனி வெற்றிக்காக என்ன செய்தார் என்பதை பார்த்து அதனைப் பின்பற்றி இருந்தாலே இந்தியா தற்போது ஐசிசி கோப்பையை வென்று விடும்.
ஒரு அணி நினைத்த ரிசல்ட்டை பெற முடியவில்லை என்றால் அதனை அப்படியே வைத்திருப்பதில் எந்த லாபமும் கிடையாது. புது ரத்தத்தை புகுத்த வேண்டும். இதை தான் தோனி 2013 ஆம் ஆண்டு செய்தார்.
தோனியால மட்டும் எப்படி ஐசிசி கோப்பையை வெல்ல முடிகிறது? அஸ்வின் விளக்கம்!
சேவாக், கம்பீர், சச்சின் என யாரும் இல்லாத நிலையில் ஷிகர் தவாணையும், நடுவரிசையில் களமிறங்கிய ரோகித் சர்மாவையும் தொடக்க வீரராக களம் இறக்கினார். தற்போது இந்திய அணியில் தொடக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் நடு வரிசையில் சரியான வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது.
அதற்கு தோனியை போல் ரோகித் சர்மா புது வீரர்களை அணியில் கொண்டு வர வேண்டும். உதாரணத்திற்கு சஞ்சு சாம்சன், திலக் வர்மா போன்ற வீரர்களை எல்லாம் ரோகித் அணிக்குள் கொண்டு வரவேண்டும்.
இங்கிலாந்து போன்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கனவில் கூட யாரும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் தோனி அதனை செய்து வெற்றியும் கண்டார்.
இதற்கு காரணம் நமது பலம் என்னவோ அதை வைத்து களமிறங்க வேண்டும் என்ற தோனியின் முடிவு தான். இதே போல் இந்திய அணி ஜடேஜாவை தவிர்த்து இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் கொண்டு வர வேண்டும்.
தோனி எந்த முடிவ எடுத்தாலும் 16 வருசமா இந்த ஒருத்தர் கிட்ட மட்டும்தான் சொல்வாரம்!
பிளேயிங் லெவனில் மூன்று சுழற் வந்து வீச்சாளர் என்ற தைரியமான முடிவை இந்தியா எடுத்தால் நிச்சயம் அது பலன் அளிக்கும்.மேலும் தோனி அப்போது கைவசம் இருந்த வீரர்களை எந்த வகையில் பயன்படுத்த முடியுமோ அவ்வாறு செய்தார்.
உதாரணத்துக்கு தினேஷ் கார்த்திக்கை நடு வரிசையிலும் உமேஷ் யாதவ் போன்ற வீரரை பிளேயிங் லெவனிலும் சேர்த்தார். இதை தான் தற்போது ரோகித் சர்மாவும் செய்ய வேண்டும். எடுத்தால் இந்த 11 பேர் தான் எடுப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்காமல் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
மேலும் தற்போதைய கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் அதிரடியாக விளையாட தொடங்கி விட்டது. இதனால் இந்தியாவும் அதே போன்ற ஒரு பாணியை கையில் எடுக்க வேண்டும். இப்படி அதிரடி மாற்றங்களை எடுக்காத வரையில் இந்திய அணிக்கு கோப்பை கிடைப்பது கடினமே.