தோனி எந்த முடிவ எடுத்தாலும் 16 வருசமா இந்த ஒருத்தர் கிட்ட மட்டும்தான் சொல்வாரம்!
தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. 16ஆவது சீசனில் விளையாடியபோது, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்தோடுதான் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். இவர் அடுத்த சீசனோடு ஓய்வுபெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. 16ஆவது சீசனில் விளையாடியபோது, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்தோடுதான் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். இவர் அடுத்த சீசனோடு ஓய்வுபெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் சிஎஸ்கேவுக்கும், கேப்டன் தோனிக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில்,
''ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்வதாக எங்களிடம் தோனி உடனடியாக தெரிவித்தார். அதுமட்டும் இன்றி எதிர்காலத்தில் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து அவருக்கு தெளிவாக தெரியும்''
''எனவே நாங்கள் அவரிடம் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தோனி அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ராஞ்சி சென்று புதுமண தம்பதிகளான ருதுராஜ் கெய்க்வாட், அவரது மனைவியை சந்தித்தார்.
அதோடு அடுத்த ஜனவரி, பிப்ரவரி வரை அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை. அதன்பிறகே அவர் எந்தவொரு முடிவினையும் மேற்கொள்வார். எந்த முடிவினை எடுத்தாலும், காசி விஸ்வநாதனிடம் மட்டும் கூறுவார்'' எனத் தெரிவித்தார்.
''காசி விஸ்வநாதன் மூலம்தான், தோனி எடுத்த முடிவு எங்களுக்கு தெரிய வரும். வேறு யாரிடமும் தோனி கூற மாட்டார். காலில் காயம் ஏற்பட்டது குறித்து தோனி யாரிடமும் புகார் கூறியது கிடையாது. அவர் விளையாட தான் ஆர்வமாக இருந்தார்'' என்றார்.