நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம்! புதிய பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் (24) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என தெரிவித்தார்.

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் (24) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார்.
பிரதமராக பதவியேற்றுக் கொண்டதுடன் கடமைகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளது. பின்னர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். பெரும்பாலும் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும்” என்றார்.