ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டன. அதன் பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டே தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசால் 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபோவதாகவும், தீர்வை வழங்காவிட்டால் ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விடுத்தார்.
அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002ஆம் முதல் ஈ.பி.எப், ஈ.டி.எப் என்பன செலுத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு நிலுவையில் உள்ள தொகை செலுத்தப்பட வேண்டும் என இ.தொ.காவின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தோட்டவாரியாக இம்முறை மே தின கூட்டம், நிகழ்வை எளிமையான முறையில் - உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.
இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் இன்று (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.