பலத்த மழை: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கம்பஹாவில் வெள்ள அபாயம்

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கம்பஹாவில் வெள்ள அபாயம்
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து, மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இன்று (22) வெளியிட்டுள்ளது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மழைவீழ்ச்சி தொடர்ந்தால் மண் சரிவு, கல் உருளல், மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேக்கம் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள், பொதுமக்களை எச்சரித்துள்ளனர். குறிப்பாக மலைச்சரிவுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு அபாயம் 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் மழையால் அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்ததாவது, நேற்றிரவு (21) முதல் பெய்து வரும் கடும் மழையால் பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தற்போது 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், சில பகுதிகளில் 250 மில்லிமீட்டரைத் தாண்டிய மழையும் பதிவாகியுள்ளதாக தூனமலை நீர் அளவீட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கம்பஹா, கட்டான, வத்தளை உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில பகுதிகளில் 200 முதல் 300 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் கூறிய பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, வானிலை நிலைமைகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு அவசர அறிவிப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT