இந்த ஆண்டு 144 நிதிசார் இணையவழிக் குற்ற வழக்குகள் விசாரணையில் – பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையில் இந்த ஆண்டு மட்டும் 144 நிதிசார் இணையவழிக் குற்ற வழக்குகள் விசாரணையில் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 144 நிதிசார் இணையவழிக் குற்ற வழக்குகள் விசாரணையில் – பாதுகாப்பு அமைச்சர்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் இந்த ஆண்டு (2026) மட்டும் 144 நிதி தொடர்பான இணையவழிக் குற்ற வழக்குகள் விசாரணையில் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி வரையிலான நிலவரப்படி, மேல் மாகாணத்தில் 107 இணையவழிக் குற்ற வழக்குகளும், மத்திய மாகாணத்தில் 6, தென் மாகாணத்தில் 1, கிழக்கு மாகாணத்தில் 3, வடமேல் மாகாணத்தில் 7, வடமத்திய மாகாணத்தில் 11, மற்றும் வட மாகாணத்தில் 9 வழக்குகளும் விசாரணையில் இருப்பதாகக் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், இந்த ஆண்டில் 36 நிதிசார் இணையவழிக் குற்ற வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்க்கப்பட்ட 36 வழக்குகளில், 29 மேல் மாகாணத்திலும், ஒன்று மத்திய மாகாணத்திலும், ஆறு தென் மாகாணத்திலும் பதிவானவை.

2025 ஆம் ஆண்டில் 680 நிதிசார் இணையவழிக் குற்ற வழக்குகளும், 2024 ஆம் ஆண்டில் 683 வழக்குகளும் பதிவாகியிருந்ததாக அமைச்சர் விஜேபால மேலும் குறிப்பிட்டார். 

நிதி மோசடிகள், இணையவழி மோசடிகள், கடனட்டை மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான இணையவழிக் குற்றங்கள் இந்த வழக்குகளில் அடங்கும் என்று அமைச்சர் விளக்கினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT