250 குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் ட்ரம்ப்: அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!

ட்ரம்பின் இந்த செயலானது இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினரை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும் என்று உயர் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

250 குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் ட்ரம்ப்: அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, 250 குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்புகளை வழங்குவது குறித்து டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்த அறிவிப்புகள் அவரது பிறந்த நாளான ஜூன் 14 இல் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக ஜனவரி 6 ட்ரம்ப் பதவியேற்றபோது கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை பல அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்பை கொண்டுவந்தது. தற்போது மீண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

ட்ரம்பின் இந்த செயலானது இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினரை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும் என்று உயர் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தங்கள் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்திய அதிகாரிகளுக்குத் தாராளமாக மன்னிப்பு வழங்குவதன் மூலம், ட்ரம்ப் “பொது ஊழலை இயல்பாக்குகிறார்” என்று முன்னாள் நீதித்துறை மன்னிப்பு வழக்கறிஞர் லிஸ் ஓயர் போன்ற வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT