பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு விசேட அறிவித்தல்
இம்மாதம் முழுவதும் கட்டணம் செலுத்தாமல், பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக இம்மாதம் முழுவதும் கட்டணம் செலுத்தாமல், பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சான்றிதழ் இல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை அவர்கள் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கணிசமான எண்ணிக்கையிலான சிறுவர்கள் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பதாகக் இதன்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.