விரைவில் களத்தில் சந்திப்போம் - ரிஷப் பந்த்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Jan 17, 2023 - 07:19
Mar 10, 2023 - 13:53
விரைவில் களத்தில் சந்திப்போம் - ரிஷப் பந்த்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து ஐபிஎல் தொடர் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அதேபோல் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பையிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்தின் இடத்தை பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், 3 ஃபார்மேட்டுகளிலும் ரிஷப் பந்த் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் விபத்திற்கு பின்னர் முதன்முறையாக ரிஷப் பந்த் ட்வீட் செய்துள்ளார். அந்த  பதிவில், ‘எனக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. நான் குணம் அடைந்து வருகிறேன். 
எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிசிசிஐ, ஜெய் ஷா, அரசு அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னுடைய ரசிகர்கள், அணி வீரர்கள், மருத்துவர்களுக்கும் நன்றி. உங்களுடைய அன்பான வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்தின. விரைவில் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதை எதிர்பார்த்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்