காணிக்கையாகச் செலுத்தப்பட்ட 2000க்கும் மேற்பட்ட ஆட்டுத் தலைகள் கண்டுபிடிப்பு
இறந்து ஆயிரம் ஆண்டுகளான பிறகும் அவரை வழிபடும் ஒரு குழு அந்தக் காணிக்கைகளை வைத்ததாக நம்பப்படுகிறது.

எகிப்தில் பாடம் செய்யப்பட்ட 2000க்கும் அதிகமான ஆடுகளின் தலைகளை ஆய்வாளர்கள் ஓர் ஆலயத்தில் கண்டெடுத்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுலா, தொல்பொருள் அமைச்சு நேற்று (26) தெரிவித்தது.
அவை மன்னர் இரண்டாம் ராம்செஸுக்காக (Ramses II) நிறுவப்பட்ட ஆலயத்தில் காணிக்கையாய் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
இறந்து ஆயிரம் ஆண்டுகளான பிறகும் அவரை வழிபடும் ஒரு குழு அந்தக் காணிக்கைகளை வைத்ததாக நம்பப்படுகிறது.
மன்னர் இரண்டாம் ராம்செஸ் கி.மு.1304இலிருந்து 1237வரை, சுமார் 70 ஆண்டுகள் எகிப்தை ஆண்டு வந்தார்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு ஆலயத்தைப் பற்றியும் அங்கு நிகழ்ந்தவற்றைப் பற்றியும் மேலும் அறிவதற்கு உதவும் என்று ஆயவாளர்கள் கூறுகின்றனர்.