ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரண்டு வீதிகளை மீண்டும் திறக்க உத்தரவு
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரண்டு வீதிகளை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்காக திறக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள சேர் பரோன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையை இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.