யாருக்கு ஆதரவு - சந்திரிக்கா வெளியிட்ட தகவல்
நிட்டம்புவ பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் தான் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து சந்திரிகா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.