பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்
பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (27) வழங்கப்பட்டது.
158 வருட பொலிஸ் வரலாற்றில் கான்ஸ்டபிள் ஆக சேவையில் இணைந்துகொண்டு பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுகொண்டிருக்கும் ஒரே அதிகாரி பிரியந்த வீரசூரிய என தெரிவிக்கப்படுகின்றது.