10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு அபார வெற்றி
ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பதில் இன்னிங்ஸ் விளையாடிய இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன அரை சதம் அடித்தார்.
51 பந்துகளைச் சந்தித்த திமுத் 8 நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்கள் எடுத்தார்.
பதும் நிஸ்ஸங்க 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 30 ஓவர்கள் 2 பந்துகளில் 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
சிறப்பாக பந்து வீசிய வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பந்து வீச்சில் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.