NZ vs SL, 1st Test: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி!

நியூசிலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

Mar 13, 2023 - 14:12
Mar 13, 2023 - 14:15
NZ vs SL, 1st Test: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி!
New Zealand vs Sri Lanka, 1st Test, Christchurch, 5th day, March 13, 2023

நியூசிலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் அடித்தது இலங்கை அணி. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி டேரில் மிட்செலின் அதிரடியான சதத்தின் மூலம், 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 20 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷதா ஃபெர்னாண்டோ - திமுத் கருணரத்ன இணை தொடக்கம் கொடுத்தனர். 
இதில் கருணரத்ன 17 ரன்களிலும், ஒஷாதா 28 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.  இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. 

அதன்பின் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜெயசூர்யா 6 ரன்களுடனும், சண்டிமல் 42 ரன்க்ளுடனும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் தனது 14ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். 

அதனைத்தொடர்ந்து 115 ரன்களில் மேத்யூஸும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தனஞ்செயாவும் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 302 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் பிளைர் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - கேன் வில்லியம்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை சேர்த்திருந்தது. 

இதையடுத்த 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியில்  டாம் லேதம் 20 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 20 ரன்களுடனும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் - டெரில் மிட்செல் இணை இறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இந்த இன்னிங்ஸில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செல் 81 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் தனது 27ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் அதேசமயம் அடுத்து களமிறங்கிய டாம் பிளெண்டல் 3, மைக்கேல் பிரேஸ்வெல் 11, டிம் சௌதீ ஒரு ரன் என அடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதில் மேட் ஹென்றி 4 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகியதால், ஆட்டத்தின் பரபரப்பும் கூடியது. அதன்பின் கேன் வில்லியம்சன் ஒரு பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் அதில் ஒரு ரன்னை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேன் வில்லியம்சன் 121 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

அதேசமயம் இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது. அதெசமயம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்