2024 புத்தாண்டு ராசி பலன் : சனியால் பொன்னாக ஜொலிக்கப் போகும் மேஷ ராசிக்கார்கள்
2024 புத்தாண்டு ராசி பலன் : சனி பகவான் லாப சனியாக இரண்டு ஆண்டுகளுக்கு பயணம் செய்வார். பிரிந்த கிரகங்கள் முழு பலனையும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் தரப்போகின்றன.

2024 புத்தாண்டு ராசி பலன்
ராகு பகவான் குரு பகவானை விட்டு விலகி விட்டார். ராகுவும் தனித்த நிலையில் வலிமையாக குருவின் வீடான மீன ராசியில் பயணம் செய்கிறார். குரு பகவானும் தனித்து மேஷ ராசியில் முழு சுபராக பயணம் செய்கிறார்.
சனி பகவான் லாப சனியாக இரண்டு ஆண்டுகளுக்கு பயணம் செய்வார். பிரிந்த கிரகங்கள் முழு பலனையும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் தரப்போகின்றன.
2024 புத்தாண்டு ராசி பலன் : மேஷம்
கடந்த சில ஆண்டு காலமாகவே உங்களுக்கு கிரகங்களின் பயணம் சாதகமாகவே இல்லை. பாடாய் படுத்திய உடல் நலக்கோளாறு, வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை, தேவையற்ற பாலிடிக்ஸ் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல், ஊரை விட்டே ஓடி விடலாமா ஆன்மீகவாதியாக மாறி விடலாமா என்று கூட நினைத்திருப்பீர்கள். 2024ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு விடியல் பிறந்து விட்டது.
உங்கள் ராசியில் சேர்ந்திருந்த ராகு குரு கூட்டணி பிரிந்து விட்டது. ராகு விலகியது உங்களுக்கு ஒரு நிம்மதி. அதே போல குரு பகவானும் பாம்பின் பிடியில் இருந்து விடுதலையாகி விட்டார். நீங்கள் பட்ட காயங்களுக்கு மருந்து போடும் விதமாக ராகு கேது பெயர்ச்சி அமர்ந்துள்ளது. ரணங்களுக்கு மருந்து போடப்போகிறது. விடிவுகாலம் பிறந்து விட்டது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் சுறுசுறுப்பு கூடும். பிரச்சினைகள் நீங்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். உடல் சுறுசுறுப்பாகும்.
தலை மேல் அமர்ந்திருந்த பாம்பு கிரகமான ராகு விலகி விட்டது. இருளடைந்திருந்த முகம் இனி பொலிவடையும். உங்களின் தேஜஸ் கூடப்போகிறது. மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். அமைதியும் சாந்தமும் நிலவப்போகிறது. 12ஆம் வீட்டில் ராகு இருப்பதால் உலக சுற்றுலா செல்லப்போகிறீர்கள். வெளிநாடு பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடும்.
புது வீடு வாங்குவீர்கள். இடமாற்றம் ஏற்படும். கேது உங்களுக்கு சாதகமான பலன்களை தரப்போகிறார். கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினைகள் தீரும். தொட்டதற்கெல்லாம் சண்டை போட்டவர்கள் இனி நெருக்கமடைவீர்கள். பண வருமானம் வரும் தீராத கடனும் தீரப்போகிறது. எதிரிகள் தொல்லை விலகப்போகிறது. வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கப்போகிறது. தடுமாற்றம் விலகி தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.
உங்கள் ஸ்டேட்டஸ் உயரப்போகிறது. திரைத்துறையில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு தொந்தரவுகள் நீங்கும். புரமோசன் கிடைக்கும். புது இடமாற்றம் ஏற்படும். உங்களைப்பற்றி ஏளமான பேசியவர்கள் இனி உங்களை மதித்து பேசுவார்கள். இனி நல்ல செய்திகள் தேடி வரும். வீடு, நிலம் வாங்குவீர்கள். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு வெற்றியை கிடைக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பயம் பதற்றம் விலகி விடும். திடீர் திருப்புமுனைகளை தரப்போகிறது ராகுவினால் உங்களுக்கு யோகமும், கேதுவினால் ஆன்ம பலமும் கிடைக்கும்.
உங்களுக்கு இனி முழுமையான பலன்களைத் தரப்போகிறார் குரு பகவான். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்களுக்கு குரு பலன் முழுமையாக கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். இனி தொட்டதெல்லாம் பொன்னாகும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள்தான் ராஜா. பல வழிகளில் இருந்தும் பணத்தை கொட்டப்போகிறார் குரு பகவான். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்லப்போவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
தன ஸ்தானம் குடும்ப ஸ்தானத்தில் அமரப்போகும் குரு பகவான் நீங்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கப்போகிறார். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிரிகளின் தொந்தரவுகள் நீங்கும். தொல்லைகள் இனி இல்லை என்பதால் தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தை பெறப்போகிறீர்கள். 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் உங்களை யாராலும் அசைக்க முடியாது.
லாப சனியாக உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் 2026ஆம் ஆண்டு வரைக்கும் பயணம் செய்யப்போகிறார் சனி பகவான். கொட்டிக்கொடுக்கப்போகிறார் சனிபகவான். கோடி கோடியாக குவிக்கப்போகிறீர்கள்.
வராத பணமெல்லாம் வீடு தேடி வரும். பெண்களுக்கு பொன்நகை சேர்க்கை அதிகரிக்கும். பொன்னாக ஜொலிக்கப்போகிறீர்கள். ராகு கேது, குரு, சனி என ஆண்டு கிரகங்கள் மூன்றுமே சாதகமாக இருப்பதால் 2024ஆம் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டமழையில் நனையப்போகிறீர்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.