சூரியன் பெயர்ச்சி பலன் – மார்ச் மாதம் மூன்று ராசிகளுக்கு டபுள் வெற்றி, டபுள் ஜாக்பாட்

ஒரே மாதத்தில் நடைபெறும் இந்த நான்கு பெயர்ச்சிகள் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகுந்த சாதகமான பலன்களை தரும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

பெப்ரவரி 10, 2026 - 06:21
சூரியன் பெயர்ச்சி பலன் – மார்ச் மாதம் மூன்று ராசிகளுக்கு டபுள் வெற்றி, டபுள் ஜாக்பாட்

ஜோதிடத்தில் நவக்கிரகங்களின் தலைவராக சூரிய பகவான் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், தன்னம்பிக்கை, தலைமைத்துவம், உடல்நலம் மற்றும் சமூக மரியாதை ஆகியவை சிறப்பாக அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை. சூரியன் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றமே கூட, 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் சூரியன் ஒரே மாதத்தில் நான்கு முறை நட்சத்திர மாற்றம் பெற உள்ளார். மார்ச் 5ஆம் தேதி அதிகாலை 12.59 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்திலும், மார்ச் 15ஆம் தேதி அதிகாலை 1.08 மணிக்கு மீன நட்சத்திரத்திலும், மார்ச் 18ஆம் தேதி காலை 8.27 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், மார்ச் 31ஆம் தேதி இரவு 8.16 மணிக்கு ரேவதி நட்சத்திரத்திலும் சூரியன் பெயர்ச்சி அடைகிறார். ஒரே மாதத்தில் நடைபெறும் இந்த நான்கு பெயர்ச்சிகள் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகுந்த சாதகமான பலன்களை தரும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி காலம் மிகவும் நன்மை தரும். உடல்நலம் மேம்பட்டு, நீண்ட நாட்களாக இருந்த நிதி பிரச்சனைகள் தீரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மார்ச் மாதம் தொடங்கியதுடன் நல்ல காரியங்கள் கைகூடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் தீர்ந்து, மனநிம்மதி கிடைக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பும் அமையும்.

கடக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் முழுவதும் சூரியன் பெயர்ச்சிகள் மிகுந்த சாதகத்தை அளிக்கும். தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நெருங்கிய உறவினர்களின் மூலம் திருமண வரன் அமைய வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வாழ்க்கையில் இருந்த நிதி சிக்கல்கள் படிப்படியாக தீரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது சிறந்த காலமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை தருவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பும், பொன் மற்றும் பொருள் சேர்க்கை ஏற்படும் யோகமும் உள்ளது.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக அமையும். சூரியன் பெயர்ச்சியின் மூலம் பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரங்களை பகிர்ந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும். நிதி நிலைமை வலுப்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சிறுசிறு பிரச்சனைகள் தீர்ந்து எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகலாம். வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகமும் இந்த காலகட்டத்தில் உள்ளது.

பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பொதுவான கணிப்புகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டவை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!