மதுபானம் தொடர்பில் முதல் தடவையாக எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்
முதல் தடவையாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரங்களை சோதனை செய்ய கலால் வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

முதல் தடவையாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரங்களை சோதனை செய்ய கலால் வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுபானத்தின் தரத்தை உறுதி செய்யுமாறு பாராளுமன்ற கோப் குழு அண்மையில் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமையவே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோக நிலையங்களில் மதுபான மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு, அவை சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
உரிய தரத்திற்கு அமைய மதுபானத்தை விற்பனை செய்யாத மதுபான விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.