புதிய கடவுச்சீட்டு: முன்னாள் அரசாங்கத்தின் முடிவை நிறுத்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

இந்த கொள்முதல் ஐந்து மில்லியன் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

செப்டெம்பர் 27, 2024 - 15:55
புதிய கடவுச்சீட்டு: முன்னாள் அரசாங்கத்தின் முடிவை நிறுத்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

இலங்கையில் நிலவும் கடவுச்சீட்டு பற்றாக்குறையை தீர்ப்பதற்காக 750,000 N-சீரிஸ் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான முன்னாள் அமைச்சரவையின் தீர்மானத்தை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த கொள்முதல் ஐந்து மில்லியன் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

அமைச்சரவையின் தீர்மானம்  கேள்விப்பத்திர நடைமுறையை மீறிய செயற்பாடு, ஊழல்  என எபிக்லங்கா நிறுவனமும் அதன் நிறைவேற்று தலைவரும் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த இடைக்கால உத்தரவு ஒக்டோபர் 1ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!