நாளை திங்கட்கிழமை முதல் குறைவடையும் எரிவாயு விலை

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 7, 2022 - 20:24
செப்டெம்பர் 19, 2022 - 23:05
நாளை திங்கட்கிழமை முதல் குறைவடையும் எரிவாயு விலை

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய்க்கு மேல் குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த சூத்திரத்தின் அடிப்படையில் நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கும் வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொள்வோம் என்று முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “லிட்ரோ நிறுவனம் நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனினும், தற்போது லிட்ரோ நியாயமான லாபத்தை ஈட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 22 நாட்களில் 2.87 மில்லியன் 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை லிட்ரோ லங்கா வழங்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!