சமையல் எரிவாயுவின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை 420 ரூபாயினால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், புதிய விலை 4,100 ரூபாயாகும்.
அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 168 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,645 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.