கிளிநொச்சி பாடசாலை மாணவி மாயம்! வெளியான தகவல்!
கிளிநொச்சி, விநாயகபுரம் பகுதியில் காணாமல்போன உயர்தரத்தில் கல்விபயிலும் பாடசாலை மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கேட்டுள்ளனர்.

கிளிநொச்சி, விநாயகபுரம் பகுதியில் காணாமல்போன உயர்தரத்தில் கல்விபயிலும் பாடசாலை மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கேட்டுள்ளனர்.
குறித்த மாணவியைக் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
18 வயதுடைய புவனேஷ்வரன் ஹனி என்ற மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் இது தொடர்பில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மாணவி காணாமல்போன தினத்தன்று அவர் மேலதிக வகுப்புக்கும் சமூகமளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாணவி கண்டறியப்படாமையினால் பொதுமக்களின் உதவியைப் பொலிஸார் கோரியுள்ளனர்.
மாணவி தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.