கர்ப்பிணி மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற கணவன்
புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று (03) மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரே, மனைவியில் தலையுடன் சரணடைந்துள்ளார்.

வவுனியா புளியங்குளத்தில் கர்ப்பிணி மனைவியில் தலையை கணவன் வெட்டி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுச்சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று (03) மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரே, மனைவியில் தலையுடன் சரணடைந்துள்ளார்.
அங்குள்ள அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ஆசிரியையே (32) இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது, குடும்பத்தகராறு விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி மனைவியை அழைத்துச் சென்று கழுத்தை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சடலத்தை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.