குழந்தைகளை தாக்கும் நிபா வைரஸ்... நோய் பரவலை தடுக்கக்கூடிய 5 வழிகள் இதோ!

நிபா வைரஸ் காய்ச்சல்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது பலரையும் எச்சரிக்கை அடையச் செய்துள்ளது.

Sep 22, 2023 - 10:27
குழந்தைகளை தாக்கும் நிபா வைரஸ்... நோய் பரவலை தடுக்கக்கூடிய 5 வழிகள் இதோ!

நிபா வைரஸ் காய்ச்சல்

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது பலரையும் எச்சரிக்கை அடையச் செய்துள்ளது. விலங்குகளிலிருந்து பரவும் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இதுவரை இருவர் இந்த வைரஸ் காய்ச்சலினால் இறந்துள்ளதோடு 9 வயது குழந்தை உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு 21 நாளில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். கோழிக்கோடு மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலமும் இத்தொற்று நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏன் குழந்தைகளிடத்தில் நிபா வைரஸ் அதிகமாக பரவுகிறது? 

நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் தொற்றாகும். இது தீவிர உடல்நலக் குறைவை உண்டாக்கி மனிதர்களை கொல்லக் கூடியது. முக்கியமாக, பெரியவர்களை விட குழந்தைகளே இந்நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இது கவலைக்குரிய விஷயமாகும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பெரியவர்களை விட பலவீனமாக இருப்பதால், பாதிக்கப்பட்ட நபரோடு நேரடி தொடர்பு கொள்ளும் போது இவர்கள் எளிதில் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். ஏன் இந்நோய் குழந்தைகளிடத்தில் அதிகமாக பரவுகிறது மற்றும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக கூறுகிறார் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர்.நீரஜ் குமார் துலாரா.

முதிர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு சக்தி

பலவீனமாக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாலேயே இந்நோயினால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் குறிப்பாக புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் உடலியல் செயல்பாடு வளரும் பருவத்தில் இருக்கிறது. இதன் விளைவாக நிபா வைரஸ் போன்ற தொற்றுகளை எதிர்க்கும் ஆற்றல் இவர்களில் நோய் எதிர்ப்பு சக்திக்கு இருக்காது.

குடும்பத்தாரோடு நெருக்கமாக பழகுவது

குழந்தைகள் எப்போதுமே தங்கள் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு நெருக்கமாக இருப்பார்கள். வீட்டிற்குள்ளேயே வைரஸ் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேலும், குழந்தைகளால் தடுப்பு நடவடிக்கைகளை முழுதாக புரிந்துகொள்ள முடியாததோடு அதை ஒழுங்காக கடைபிடிக்கவும் மாட்டார்கள். இதனால் தொற்றுகள் அதிகரிக்கிறது.

விழிப்புணர்வு இல்லாமை

தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவோ, புரிதலோ குழந்தைகளிடத்தில் குறைவாகவே இருக்கும். அடிக்கடி கைவ கழுவுவதின் அவசியம், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி ஆகியவை எவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதெல்லாம் அவர்களுக்கு புரியவைப்பது கடினமான விஷயம்.

நிபா வைரஸ் பரவலை தடுப்பதற்கான 5 டிப்ஸ்கள் 

விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: பெற்றோர்களோ அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களோ குழந்தைகளுக்கு வைரஸ் குறித்து சொல்லிக் கொடுப்பது மிகவும் முக்கியமாகும். அதுமட்டுமின்றி, வைரஸ் பரவலைத் தடுக்க அடுத்தவர்களோடு இடைவெளிவிட்டு பழக வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும் ஆகியவற்றையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சுகாதார பழக்கத்தை கடைபிடியுங்கள்

சாப்பிடுவதற்கு முன்பும் கழிவறையிலிருந்து வந்த பிறகும் ஹாண்ட்வாஷ் அல்லது சோப்பை கொண்டு தங்கள் கைகளை சுத்தம் செய்ய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இல்லையேல் 60% ஆல்கஹால் உடைய சிறிய சானிடைசரை பயன்படுத்த அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

மாஸ்க் பயன்பாட்டை ஊக்கப்படுத்துங்கள்

வெளியிடங்களுக்குச் செல்லும் போது ஒருவருக்கொடுவர் இடைவெளி விட்டு நடப்பது சிரமமான காரியம். ஆகையால் குழந்தைகளை மாஸ்க் அணிய ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகளின் வாய் மற்றும் மூக்குப் பகுதியை மூடும் வகையில் மாஸ்க் இருக்க வேண்டும். மேலும், அதனை எப்படி பயன்படுத்துவது, எப்படி அகற்றுவது மற்றும் பயன்படுத்திய மாஸ்க்கை எப்படி அப்புறத்தப்படுத்துவது என்பதனையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தடுப்பூசி இல்லாமை

நிபா வைரஸுக்கு குறிப்பிட்ட தடுப்பூசி என்று எதுவும் இல்லை. mRNA நிபா தடுப்பூசி சோதனைக் கட்டத்தில் உள்ளது. நோய் வராமல் தடுக்கக் கூடிய தடுப்பூசிகள் எதுவும் இல்லாததால், குழந்தைகள் இந்நோய்க்கு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.