மனுஷ மற்றும் ஹரினின் கட்சி உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது - உயர் நீதிமன்றம்

கட்சி உறுப்புரிமையை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆகஸ்ட் 9, 2024 - 14:56
ஆகஸ்ட் 9, 2024 - 15:01
மனுஷ மற்றும் ஹரினின் கட்சி உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது - உயர் நீதிமன்றம்

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய  நீதியரசர்கள் மூவரடங்கிய அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!