நாட்டில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை
உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றத்துக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.

உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றத்துக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.
அந்தவகையில்,தங்கத்தின் விலையானது இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 605,740 ரூபாயாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 170,950 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,750 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,600 ரூபாயாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 21,370 ரூபாயாவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,590 ரூபாயாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என கூறப்படுகிறது.