உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று சனிக்கிழமை (26) வெளியாகி உள்ளன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று சனிக்கிழமை (26) வெளியாகி உள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த நவம்பர் முதல் டிசெம்பர் வரை இடம்பெற்றதுடன் 333,183 மாணவர்கள் தோற்றினர்.
அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்களும், 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகள் ஆவர்.
பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk, www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.