நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்
அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதற்கமைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, துறைமுகம், சுகாதாரம், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட சில துறைகளுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
ஏனைய அனைத்து துறையினரும் வீடுகளில் இருந்து பணியாற்றிவதன் மூலம் இந்த எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏனைய செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்காக ஏனைய துறையினரின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
எமது வாட்ஸ்அப் குழுவில் இணைய:- https://chat.whatsapp.com/IsDYcKcaILjH8XEe5hZiCl