வெட்டப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற தந்தையும் மகனும்... என்ன நடந்தது?

வெட்டப்பட்ட தலை மற்றும் ஆயுதத்துடன் நானாஷி காவல்நிலையத்திற்கு தந்தை மற்றும் மகனும் சென்று சரண் அடைந்திருக்கின்றனர். 

ஜனவரி 3, 2025 - 10:00
வெட்டப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற தந்தையும் மகனும்... என்ன நடந்தது?

மகாராஷ்ராவில் தந்தை, மகன் ஆகியோர் பக்கத்து வீட்க்காரரின் வெட்டப்பட்ட தலையுடன் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்றதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் போக் (40). இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் நாசிக் மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

இவர்களின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் குலாப் ராம்சந்திர வாக்மரே (35). இந்தநிலையில், சுரேஷ் போக் மற்றும் அவரது மகன் சேர்ந்து, பக்கத்து வீட்டிற்கு வசிக்கும் வாக்மரே என்பவரின் தலையை கோடாறியால் வெட்டியுள்ளார்.

பின்னர், வெட்டப்பட்ட தலை மற்றும் ஆயுதத்துடன் நானாஷி காவல்நிலையத்திற்கு தந்தை மற்றும் மகனும் சென்று சரண் அடைந்திருக்கின்றனர். 

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அறிந்ததும், குற்றம் சாட்டப்பட்ட தந்தை-மகன் இருவரின் வீட்டை சேதப்படுத்தியதுடன், அவர்களின் காரை எரித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பொலிஸாரின் கூற்றுப்படி, சுரேஷ் போக்கின் மகளை வீட்டை விட்டு ஓடி செல்ல குலோப் உதவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட சண்டையில் குலாப்பை சுரேஷ் போக் தனது மகனுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!