சென்னை விமானத்தில் இயந்திரக்கோளாறு: 326 பேர் உயிர் பிழைத்தனர்

உடனடியாக விமானத்தை அவசரமாக நிறுத்திவிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

ஜுன் 9, 2025 - 10:07
சென்னை விமானத்தில் இயந்திரக்கோளாறு: 326 பேர் உயிர் பிழைத்தனர்

சென்னை விமான நிலையத்தில் இருந்து டுபாய் செல்ல எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 9.50 மணிக்கு 312 பயணிகள், 14 விமான ஊழியர்கள் என 326 பேருடன் புறப்பட்டது. 

விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதை நோக்கி சென்றது. டாக்சி பாதைக்கு வந்தபோது விமானத்தில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். 

உடனடியாக விமானத்தை அவசரமாக நிறுத்திவிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் பொறியியலாளர்கள் குழு, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். 

இயந்திரக்கோளாறை உடனடியாக சரிசெய்ய முடியாததால் 312 பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். 

பின்னர், விமானப் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், வேறு விமானங்கள் மூலம் பயணிகள் டுபாய் அனுப்பி வைக்கப்பட்டனர். 

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை, விமானி சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் 326 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!