இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக அஜித் அகார்கர்.. இனியாவது தலை எழுத்து மாறுமா?
பிசிசிஐயின் தேர்வு குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐயின் தேர்வு குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ தலைவராக இருந்த சேத்தன் சர்மா சர்ச்சையில் சிக்கி தன்னுடைய பதவியை ராஜினமா செய்தார். அதன் பிறகு தேர்வு குழு உறுப்பினராக இருந்த சிவ் சுந்தர் தாஸ் தற்காலிக தலைவராக செயல்பட்டார்.
இந்த நிலையில் புதிய தேர்வு குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணிக்கு பல்வேறு விண்ணப்பங்கள் வந்தன இதனை அடுத்து பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனை குழு நடத்திய நேர்காணலில் முடிவில் அஜித் அகார்கர் ஒருமனதாக தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 191 ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டி20 போட்டிகளில் அகார்க்கர் விளையாடியிருக்கிறார் . 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்ற போது அஜித் அகார்கர் அணியில் இருந்தார்.
எங்களுக்கு இதுபோன்ற வெற்றி தேவையில்லை.. பென் ஸ்டோக்ஸ் தரமான பதிலடி!
பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்களும் அஜித்த கார்க்கர் பல சாதனைகளை படைத்திருக்கிறார். லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சதம், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை இன்னும் அஜித் அகார்கர் வைத்திருக்கிறார்.
2000 ஆண்டு ஜிம்பாவேக்கு எதிராக அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதேபோன்று அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அவர் 23 போட்டிகளில் படைத்தார்.
இதன் பிறகு மும்பை அணியின் தேர்வு குழு தலைவராக செயல்பட்ட அஜித் அகார்கர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார்.
தற்போது தேர்வு குழு தலைவர் பதவிக்கு அஜித் அகார்கர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வீரர்கள் தேர்வில் பல பிரச்சனைகள் இந்திய அணியில் இருக்கிறது.
ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தடுக்கப்படுகிறார்கள். இதனை அனைத்தையும் அஜித் அகார்கர் மாற்றுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உலகக் கோப்பைத் தொடருக்கு அணியை தயார் செய்யும் மிகப்பெரிய பொறுப்பு தற்போது அவர் கையில் கிடைத்திருக்கிறது.