மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செப்டெம்பர் 17, 2023 - 16:30
மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி

தலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது தந்தையுடன் அக்கரப்பத்தனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றபோது தலையில் மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!