யாழில் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவினால் சோகம்

யாழில் இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று  (25) காலையில் இடம்பெற்றுள்ளது.

செப்டெம்பர் 26, 2023 - 10:47
செப்டெம்பர் 26, 2023 - 10:52
யாழில் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவினால் சோகம்

யாழில் இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று  (25) காலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயக்குமார் டானுகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்த யுவதியின் தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பலியாகியுள்ள நிலையில் தந்தை இரண்டாவது திருமணம் செய்த கொண்டுள்ளார்.

அதேவேளை கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த அவரது மாமாவின் 90வது நாள் சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மனவிரக்தியுடன் காணப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!