துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு
பிரதேச சபை அதிகாரிகள் கூட்டாக தலைவரை மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் 'மிதிகம லசா' உயிரிழந்துள்ளார்.
இன்று (22) காலை, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், தனது நாற்காலியில் அமர்ந்திருந்த, பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர் படுகாயமடைந்தார்.
பின்னர், பிரதேச சபை அதிகாரிகள் கூட்டாக தலைவரை மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஒரு கடிதத்தில் கையெழுத்திட வந்துள்ளதாக தெரிவித்து துப்பாக்கிதாரிகள் பிரதேச சபைக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.