2026 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு – ஏப்ரல், மே மாதங்களில் அதிக விடுமுறைகள்!
2026 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் மிக அதிக விடுமுறைகளைக் கொண்டுள்ளன – ஒவ்வொன்றிலும் 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன.
2026 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரச அச்சுத் துறை அந்த ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026 ஆம் ஆண்டில் மொத்தம் 26 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் விடுமுறை நாட்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் மிக அதிக விடுமுறைகளைக் கொண்டுள்ளன – ஒவ்வொன்றிலும் 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் குறிப்பிடத்தக் விடுமுறை
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு: ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை)
வெசாக் பௌர்ணமி போயா: மே 1, 2026 (வியாழக்கிழமை)
கிறிஸ்துமஸ் தினம்: டிசம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை)
இந்த அரசு விடுமுறை நாட்கள் அஞ்சல், சுங்கம் மற்றும் வானிலை ஆய்வுத் துறைகள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என அரச அச்சுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தேவைப்படும் சூழ்நிலைகளில் பொது விடுமுறை நாட்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் வர்த்தமானி அறிவிப்பு மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது திட்டமிடல்களுக்கு இந்த அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலை அடிப்படையாகக் கொள்ளலாம்.