இலங்கையில் அலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட அறிவுறுத்தல்
IMEI (ஸ்பேஸ்) என டைப் செய்து 15 இலக்க எண்ணை 1909 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலமும் சரிபார்க்கலாம்.

தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற அலைபேசி வகைகளை மாத்திரமே கொள்வனவு செய்யுமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பிரதி பணிப்பாளர் எம்.பத்திரன அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் அலைபேசியில் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அங்கீகாரம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க IMEI எண்ணைச் சரிபார்க்க வேண்டும்.
அலைபேசியின் அட்டையில் IMEI எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இல்லாவிட்டால் பெட்டியின் அடியில் உள்ள 15 இலக்கங்களை 1909 என்ற இலக்கத்துக்கு அனுப்புவன் மூலமும் IMEI இலக்கத்தை பெறலாம்.
IMEI (ஸ்பேஸ்) என டைப் செய்து 15 இலக்க எண்ணை 1909 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலமும் சரிபார்க்கலாம்.
இதன்மூலம் உங்கள் அலைபேசி பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை உடனடியாக குறுஞ்செய்தியாக பெறலாம்.
பிரச்சினைகளில் சிக்குவதைத் தவிர்த்துக்கொள்ள TRCSL இல் அங்கீகரிக்கப்பட்ட அலைபேசிகளை மட்டுமே பொது மக்கள் வாங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.