கொழும்பு புறநகரில் தேங்கியுள்ள குப்பைகளை 10 நாட்களுக்குள் அகற்ற திட்டம்!
இன்னமும் சில வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் துப்புரவு பணிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து கொழும்பு புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற எதிர்பார்ப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் திலக் ஹேவாவசம் தெரிவித்தார்.
கொலன்னாவ பகுதியில் மாத்திரம் சுமார் 8,000 தொன் குப்பைகள் தேங்கியுள்ளதாகவும், அவற்றை சுமார் 2 நாட்களில் அகற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக கொட்டிகாவத்தை, முல்லேரியா போன்ற பகுதிகளில் 10,000 முதல் 12,000 தொன் வரையிலான குப்பைகள் தேங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது மேல் மாகாண அதிகார சபையினால் நாளாந்தம் சுமார் 100 லொறிகள் ஈடுபடுத்தப்பட்டு மிகவும் வெற்றிகரமான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுமார் 10 நாட்களுக்குள் அவர்கள், தேங்கி கிடக்கும் குப்பைகள் அனைத்தையும் அகற்றுவார்கள் என நான் நினைக்கிறேன். எனினும், குப்பைகள் சேர்வது தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. ஏனெனில் இன்னமும் சில வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் துப்புரவு பணிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.