பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்குப் புறப்படுகிறார்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
அக்டோபர் 18 ஆம் திகதி வரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
தனது பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர் மட்ட சந்திப்புகளை இலங்கை பிரதமர் நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.