சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்படவில்லை வெளியான அறிவிப்பு
சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று விகாராதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சிவனொளிபாத மலையின் நாயக்க தேரர் பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும் போது, சிவனொளிபாதமலையில் கீழே உள்ள பாறையில் வளரும் தாவரங்கள் மழையுடன் கீழே விழுவதாக கூறினார்.
இது ஒரு இயற்கை நிகழ்வு என்றும், ஹட்டன் மற்றும் இரத்தினபுரி வீதிகளை இதிகட்டு பஹன வீதியுடன் இணைக்கும் பகுதியில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, சிவனொளிபாதமலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.